(பஹமுன அஸாம்)
மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இரவு நேரங்களில் பாதையில் செல்லும் துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இராக்காலங்களில் மின்விளக்குகள் இல்லாமல் பாதையில் துவிச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்லுவதனால் விபத்துக்களைக் குறைப்பதற்காகவே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி இரவு கொழும்பு-அநுராதபுரம் வீதியில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் சுமார் 75 துவிச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துவிச்சக்கரவண்டி உரிமையாளர்கள் அதற்குரிய மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு வீடுகளுக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment