கடந்த வாரத்திலிருந்து சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டுவரும் ஒருவிடயம்தான் நடிகர் தனுஷின் கொலைவெறி டி பாடலாகும். தமிழ் சினிமா உலகின் முன்னணி நாயகனும், ஸ்டைல் நடிகர் ரஜனிகாந்தின் மருமகனுமாக நடிகர் தனுஷ் கொலைவெறிப்பாடலை ஆறே ஆறு நிமிடங்களில் எழுத்தித் தள்ளிராம். இதன் மூலம் இவர் ஒருசிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பாடலாசிரியரும், சிறந்த பாடகருமாக இன்று வலம்வருகின்றார். எந்தவொரு இணையத்திலும், பத்திரிகையிலும் இவரது பாடல் பற்றியே விலாவாரியாக வலம்வருகின்றன என்றால் மிகையாகாது.
இப்பாடல் பற்றி நடிகர் தனுஷ் கூறுகையில் இப்பாடலின் வரிகள் மிக எளிமையாகவும், அதிகமான ஆங்கில வார்த்தைகளையும் உட்புகுத்தி அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும்படியாகவும் ஒருபாடல் எழுத வேண்டும் என நினைத்தேன் எழுதினேன். இந்தளவுக்கு பிரபல்யம் அடையும் என நினைக்கின்றபோது மிகமிக சந்தேதாஷமாக ஏற்படுகின்றது என்று கூறுகின்றார் நடிகர் தனுஷ். அதுமட்டுல்லாது இப்பாடலை நடிகர் அமிதாப்பச்சன்கூட இப்பாடலை ரசித்துள்ளதாகவும் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இதுபோன்றதொரு கொலை வெறி டா என்னும் ஒருபாடலை தனுஷின் மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யா எழுதுவதற்கும் முடிவு செய்துள்ளாராம். அதாவது காதல் தோல்வியில் பாடுகின்ற பாடல்கள் பெண்களை மையமாக வைத்தே பாடப்படுகின்றன. காதல் தோல்விக்கு ஆண்களை யாரும் குறைகூறுவதில்லையாம். இதனை நிவர்த்தி செய்வதற்காக அவர்களின் தாகத்தைப் போக்குவதற்காக இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள் கொலைவெறி டா பாடலை எழுதலாமே என்று யோசித்து வருகின்றாராம்.
அடிக்கடி இவர்கள் பாடல்களை எழுதட்டும் கொலைவெறி என்ன எந்தவெறியையும் தாங்குவதற்கும், ரசிப்பதற்கும் என்றொரு ஒரு கூட்டம் இருக்கும் வரை எதையும் எழுதட்டுமே நமக்கேன் வீண்வம்பு.
- துருவத்திற்காக எஸ்.எல்.எம்.

0 comments:
Post a Comment