Sunday, November 27, 2011

ஹிறா முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழா


(றிஸான் முகம்மட்) 
அக்கரைப்பற்று ஹிறா ஆங்கிலப் பாடசாலை முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் அண்மையில் அதாஉல்லா அரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

ஹிறா பணிப்பாளர் சபை உறுப்பினரும், அமைச்சர் அதாஉல்லாஹ்வின் இணைப்புச் செயலாளருமான, கீர்த்திசிறி ஏ.பி தாவூட், தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வுகளில் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி பிரதம அதிதியாகவும், பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டுப்பணிப்பாளர் ஏ.எல்.இப்றாஹிம், ஹிறா அதிபர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஒருவருட முன்பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பெருந்தொகையான பெற்றார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment