32 வயதுடைய ஒரு குதிரையை எலிசபெத் ஹெர்ரிக் மற்றும் அவளது காதலன் யோசுவா வாஸ்புருன் இருவரும் சேர்ந்து ஒரு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த அவர்களின் "தீவிர உணர்ச்சியின்" ஒரு கட்டமாகவே இது நடந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். எதிர்ப்புகளையும் வெளிக்கொணர்ந்தார்கள்.
குதிரையைக் கொன்றது மட்டுமல்லால் 21 வயதுடைய எலிசபெத் ஹெர்ரிக் குதிரையின் உடலைக் கிழித்து அதற்குள் நிர்வாணமாக இருந்துகொண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். குதிரையின் இரத்தம் தோய்ந்த உடலுக்குள் புகுந்துகொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறாள். இந்த புகைப்படங்கள் வெளியானதால் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டது இந்த காமக் காதல் ஜோடி.
அதில் ஒரு படத்தில் எலிசபெத் குதிரையின் இதயத்தைப் பிய்த்து எடுத்து சப்புவதுபோலவும் உள்ளது. இதனால் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்கள் புகைப்படங்களை எடுப்பதற்காக குதிரையைக் கொன்றிருந்தால் நாம் விலங்கு கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்வோம் என பொலிஸார் கூறினர்.
எலிசபெத்தின் தாயாரான கொயின் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், சாத்தானின் செயலாலே இப்படி நடந்துகொண்டார்கள். ஆனால், இவர்களுக்கு நாடு முழுவதுமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.





0 comments:
Post a Comment