இப்ப எந்த பேப்பர், மீடியால பாத்தாலும் வெப்சைட் பிரச்சினதான். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்துக்கும், தனி மனிசன் சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் குடுக்கிறதுக்குத்தான் இலங்கை பத்தி செய்தி போடுற எல்லா வெப்சைட்டையும் பதியச் சொல்லி இருக்காங்க. ஒரு தனிக்கை குழுபோல அரசாங்கம் செயற்படப் போகுதாக்கும்.
வெளிநாட்டுலயும், இலங்கையிலயும் இருக்கிற வெப்சைட்டுக் காரங்க அரசாங்கத்தையும், தனி மனிதர்களையும் தாக்குற மாதிரியும் நியூஸ் போடுறாங்களாம். அத தடை செய்யிறதுக் குத்தான் இந்தப் பிளேன். அதுக்காக அரசாங்கம் ஒரு போம் ஒண்டை குடுத்திருக்காங்க. அதுல கேட்டு இருக்கிற கேள்விகள் எல்லாம் எடக்கு முடக்காத்தான் இருக்கு.
வெப்சைட்டைப் பத்தின எல்லா விசயத்தையும் கேட்டுக் கறக்குற மாதிரி அதுல கேள்வி கேட்டு இருக்காங்க. அதை வெச்சி அவங்களும் ஒரு "அட்மின்" மாதிரி செயற்படலாம். அந்த வெப்சைட்டை என்ன வேணுமென்டாலும் செய்யலாம். பூட்டைப் பூட்டிவிட்டு திறப்பை அவங்க கையில குடுக்கிற மாதிரித்தான் இந்த போமை நிரப்பிக் குடுக்கிறது இருக்கு.
இது எந்தளவுக்கு சக்சஸ் ஆகுமெண்டு தெரியல. இப்படி போம் குடுத்தா எந்த வெப்சைட்டுக்கார ஆக்களும் நிரப்பிக் குடுத்து பதிவு செய்யமாட்டாங்க. குடுக்காட்டி ஆகக் குறைஞ்சது வெளிநாட்டு சேர்வர்ல இயங்குற வெப்சைட்டுகளை இலங்கையில் மட்டும்தான் தடை செய்யமுடியும். என்னதான் நடக்குத்தெண்டு பார்ப்போமே.
- மண்டு வாத்தியார்
- மண்டு வாத்தியார்
இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கான மாதிரிப் விண்ணப்பப் படிவம்


0 comments:
Post a Comment