Tuesday, November 01, 2011

போலி அனுமதிப் பத்திரம் : மூவர் கைது


மணல் அகழ்வதற்காக போலி அனுமதிப் பத்திரங்களை வழங்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணனியில் போலியாக தயார் செய்த அனுமதிப்பத்திரங்களை இவர்கள் மணல் அகழ்வோருக்கு வழங்கியுள்ளனர். கண்டி, கடுகண்ணாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் இதனை நடாத்தி வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கணனி ஒன்றையும், போலி அனுமதிப் பத்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் ஆவணப் பத்திரம் ஒன்றை 1000 ரூபாவுக்கு விநியோகம் செய்துவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:

Post a Comment