Tuesday, November 01, 2011

பாக். வீரர்கள் இருவருக்கு 7 வருட சிறை


கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப் ஆகியோர் குற்றம் செய்திருப்பதாக விசாரணை நடத்திய லண்டன் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரேயொரு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட முஹம்மட் ஆசிப்பிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஏமாற்றுவதற்காக சதி" மற்றும் "ஊழல் மூலம் லஞ்சப்பணத்தை பெற சதி" ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளிலும் சல்மான் பட் பெயர் தற்போது உறுதியாகியுள்ளது. 

மொஹமட் ஆசிப் "ஏமாற்றுவதற்காக சதி" என்ற குற்றச்சாட்டு மட்டும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. மொஹமட் ஆசிப் மீதான இரண்டாவது குற்றச்சாற்றுகளை மீண்டும் விவாதித்து 10 - 2 பெரும்பான்மை பெற்ற பிறகு ஆசிப் மீதான இரண்டாவது குற்றச்சாற்று உறுதியாகும். அப்படி உறுதியானால் இவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். இந்த வார இறுதியில் தண்டனைகள் உறுதி செய்யப்படும்.

0 comments:

Post a Comment