Thursday, November 03, 2011

லிபியாவின் புதிய தலைவர் தெரிவு


லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேர்ணல் கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால அரசின் புதிய தலைவராக அப்டெல் ரஹீம் அல்-கீப் தெரிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடைக்கால அரசானது அந்நாட்டில் பொதுத் தேர்தல் வரும்வரை இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவதே இப்புதிய தலைவரின் முக்கிய பணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment