(ஏ.ஜே.எம். ஹனீபா, அப்துல் அஸீஸ்)
உயர்கல்வி அமைச்சின் 319 மில்லியன் செலவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதி அத்துடன் சகல வசதிகளுடன் கூடிய கட்டிடத்துக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கெளரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களான எம்.ரீ.எம். ஹீட், ஏ.எம்.நபீல், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ.சத்தார், சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா, மத்தியஸ்தசபை தலைவர் எஸ்.எச்.ஏ. றாசிக் உட்பட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், திணைக்கள தலைவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டம் மத்திய பெறியியல் உசாத்துணை பணியகத்தின் (சீ.ஈ.சீ.பி.) நிபுணத்துவ உதவியுடன் சிசிற கட்டிட நிறுவனத்தின் மூலம் ஒருவருட காலத்தினுள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment