Monday, November 28, 2011

மூடப்படும் நிலையில் 1590 பாடசாலைகள்


(கலாநெஞ்சன்) 
இலங்கையில் உள்ள 9662 பாடசாலைகளில் 1590 பாடசாலைகள் மூடப்படகூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இந்த பாடசாலைகள் யாவும் போதியளவு மாணவர்கள் இன்மையால் மூடப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மூடப்படவுள்ள அபாயத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் 50இற்கு குறைவான மாணவர்களே கல்வி கற்பதாகவும், போதியளவு கல்வி வசதிகள் அங்கு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8 வருட காலப்பகுதியில் பல பாடசாலைகள் இதுபோன்று மூடப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசித்தள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க
குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் தமது பிள்ளைகளை நகரப்புறப் பாடசாலைகளிலும், பிரபலமான பாடசாலைகளிலும் சேர்ப்பதற்கு நாட்டம் காட்டுவதே இந்நிலைக்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment