Tuesday, November 15, 2011

உறங்குகின்றதா எம்.பி.யின் தொலைபேசி?


(கல்முனை செய்தியாளர்)  
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்பரை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பொது மக்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் அளிக்காமல் அசட்டையாக இருப்பதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியை உறங்கு நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வாக்களித்த மக்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், விழா நிகழ்வுகளிற்கு அழைப்பதற்கும்,அவசரத் தேவையை தீர்ப்பதற்கும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.யை தொடர்புகொள்ள முயற்சித்தால் முயற்சி பலனில்லாமல் போய்விடுவதாக கூறப்படுகின்றது.

அவருடைய 0777313XXX என்ற கையடக்கத் தொலைபேசி கூடுதலான நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டே இருக்கின்றது. அவ்வாறு தொலைபேசி வேலை செய்தாலும் அதைக்கண்டு கொள்ளாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருந்து விடுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு வேலைப்பளுக்கள் இருக்கலாம். அதற்காக எல்லா நேரங்களும் வேலைகள்தானா? என்ற கேல்வி எல்லோர் மத்தியிலும் இன்று எழுந்திருக்கின்றது.

மக்கள், தமது பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள், சமூக விடயங்களை முன்னெடுப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில்தான் அவர்களைத் தெரிவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களோ? தமது சுயநலத்தை முன்னிருத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அரசாங்கம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. அந்த வகையில் தொலைபேசி அழைப்புக்குக் கூட இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஒரு இளைஞர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்தில் தலைவராக வரக்கூடிய தகுதி உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இவருடைய செயற்பாடுகள் ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினருக்கே தகுதியானவரா? ன்ற மனநிலைக்கு மக்களை சிந்திக்கும் அளவிற்கு வைத்துள்ளதாகவும் பேசப்படுகின்றது.

கல்முனையைப் பொறுத்தவரை கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் கனவுகளை சுமந்த இடம். அவருடைய கனவுகள் நிஜமாகாமல் கனவாவே உள்ளது. அந்தக் கனவுகளை நனவாக்க பிரபல சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பிரதி மேயராக அவதாரம் எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அஷ்ரபின் கனவுகளை நனவாக்குவதே எனது இலட்சியமாகும் என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் என்ன திட்டங்களை செயற்படுத்தப்போகின்றார். என்பதும் அரசியலில் இன்று பெரிதாக கதைக்கப்படுகின்றது.

பிரபல சட்டத்தரணி நிசாம் காரியப்பரை தோற்கடிப்பதில் கடுமையாக உழைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மீது குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில் தான் சொல்வதைச் செய்யும் ஒருவர் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஹரிஸ் இன்று தள்ளப்பட்டுள்ளார். இல்லாவிட்டால் கல்முனையின் அரசியல் தலைவராக நிசாம் காரியப்பர் மக்களால் அங்கீகரிக்கப்படும் நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் அரசியலை ஒழிக்க வேண்டும் என்ற முறையில் காய்களை நகர்த்துவதாகவும் சொல்லப்படுகின்றது. இவ்வாறான திரிசங்கு நிலையில் ஹரிஸ் எம்.பி. இருக்கும் போது பொது மக்களின் தொலைபேசி அழைப்பை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருப்பது அவருடைய எதிர்கால அரசியல் பூச்சியமாகவே மாறும் நிலை நிச்சயம் ஏற்படலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் அரசியல் உயர்வதும், பணிவதும் அவருடைய கைகளிலேயே தங்கியுள்ளது. இதற்கு ஹரீஸ் எம்.பி. யாரையும் குற்றம் சொல்ல வேண்டியதில்லை.

0 comments:

Post a Comment