Tuesday, November 15, 2011

கல்விக் கல்லூரிகளில் நேர்முகப்பரீட்சை


(எஸ்.எல். மன்சூர்) 
முன்பயிற்சியின் பின்னரான ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளும் அரசின் திட்டத்திற்கு அமைவாக இலங்கையிலுள்ள தேசியக் கல்விக் கல்லூரிகளில் 14.11.2011 ஆம் திகதி முதல் நேர்முகப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் கடந்தமுறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கூடிய அடைவைப் பெற்றவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானார்கள்.

அதற்கு அடுத்தபடியான நிலையிலுள்ள மாணவர்களை தேசிய கல்விக் கல்லூரிகளில் இணைத்து இரண்டுவருட உள்ளகப் பயிற்சியும் பின்னர் ஒருவருட பாடசாலைகளில் கற்பித்தல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பலதரப்பட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் குறித்தளவு மாணவர்களை நேர்முகப்பயிற்சியின் மூலம் தெரிவு செய்யும் நோக்குடன் வருடந்தோறும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

0 comments:

Post a Comment