வெட்டிய பின்னர் வாட்டியெடுத்த 9,852 பாண் துண்டுகளை அடுக்கி தனது மாமியாரின் உருவத்தை அதில் வரைந்திருக்கிறார் பாசமிக்க லாரா எனும் மருமகள். உண்மையிலேயே கொடுத்து வைத்த மாமியார்தான்.
அருங்காட்சிய பல்கலைகழகத்தின் மேற்பார்வையாளரான 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தனது மாமியாரை வரைந்திருக்கிறார். சண்ட்ரா என்கிற மாமியாரின் 50ஆவது பிறந்தநாள் பரிசாகவே இதனை செய்து அசத்தியிருக்கிறார். இதற்கு அவருக்கு 40 நண்பர்கள் உதவி செய்தார்களாம்.
9 டோஸ்டர்களைப் பயன்படுத்தி 6 மணி நேரத்திற்கு இவ்வளவு பாணையும் வாட்டி எடுத்துள்ளார்கள். பின்னர் அதனை கவனமாக எடுத்து அதன் நிறத்துக்கேற்ப அதனை அடுக்கி வைத்து மாமியாரை உருவாக்கியிருக்கிறார். இந்த உருவத்தின் உயரம் 42 அடி 3அங்குலமும், அகவலம் 32 அடி 8 அங்குலமும் ஆகும்.




0 comments:
Post a Comment