(பி.எம்.எம்.ஏ. காதர்)
அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் பரிசளிப்புவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பிரிவு 02 இல் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரிக்கான கிண்ணத்தை அணித் தலைவரிடம் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா வழங்கினார். இந்த உதைபந்தாட்டப் போட்டிக்கு அனுசரனை வழங்கிய அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றகுமானுக்கும் அமைச்சர் நினைவுச் சின்னத்தினை வழங்கிவைத்தார்.
0 comments:
Post a Comment