Wednesday, November 09, 2011

இணையத் தளங்களை பதிவு செய்வதற்கு...


சகல இணையத் தளங்களும் தங்களை உத்தியோக பூர்வமான முறையில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

பல இணையத்தளங்கள் மற்றவர்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் கீழ்த்தரமான பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு பலதரப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சில இணையத்தளங்கள் சமூகத்திலுள்ள சில முக்கியஸ்தர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய இணைய தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனி நபருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சில இணையத் தளங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் நாட்டின் சுயாதீனத்துக்கும் மதிப்புக்கும் தீங்கிழைப்பதாகவும் அமைந்திருப்பதுடன் அவை நாட்டின் தலைவர் அமைச்சர்கள் சிரேஷ்ட அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதி முக்கிய பிரமுகர்களை இலக்காக வைத்து அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் கொடிய எண்ணத்துடன் செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சின் இவ் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இதுபற்றி அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் இந்த இணையத் தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்விதம் மற்றவர்களை அவமானச் சின்னங்களாக மாற்றும் தீய எண்ணத்துடன் பொய்யான தகவல்களை வெளியிடும் இந்த இணையத்தளங்களுக்கு எவரும் ஆதரவளிக்கக்கூடாது.

மேலே குறிப்பிட்ட இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட பின்னர் வெகுஜன ஊடக தகவல் துறை அமைச்சு இத்தகைய ஊடகங்கள் வெகுஜன ஊட கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளுக்கு அமைய நாட்டின் சட்டத்துக்கு ஏற்புடைய வகையில் தகவல்கள் உள்ளூரில் அல்லது வெளிநாடுகளிலிருந்து இணையத் தளங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இவ்விதம் ஊடக தர்மத்துக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்ளும் சகல இணையத் தளங்களும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சுடன் தொடர்புகொண்டு தங்களை உத்தியோக பூர்வமான முறையில் அமைச்சில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு விடுத்துள்ள இந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுபற்றி மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவு) திருமதி கே.டபிள்யூ.ரி.என். அமரதுங்கவுடன் தொடர்புகொள்ளவும்.

தொலைபேசி இலக்கம் : +94 112515945
பெக்ஸ் இலக்ககம் : +94 112512343        
மின்னஞ்சல் : amaratungamedia@yahoo.com, secretary@media.gov.lk 
இணையமுகவரி : www.media.gov.lk 

நன்றி:  அரசாங்க தகவல் திணைக்களம்

0 comments:

Post a Comment