Tuesday, November 29, 2011

வன்னியில் வேலையற்ற பட்டதாரிகள் பதிவு


வன்னி மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வவுனியா தமிழ் பட்டதாரிகள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றிணைப்பதும், அவர்களுக்கான தொழில் மற்றும் ஏனைய நலன் சார் விடையங்களை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 5ஆம் திகதி வரையில் இந்த பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், வன்னி மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் தமது கல்வி தகுதி சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் நற்சான்றிதழ் பத்திரம் என்பவற்றின் பிரதிகளுடன் துத்தாநந்தா இந்து இளைஞர் கட்டத்தில் நடைபெறும் இந்த பதிவு நடவடிக்கையில் பங்குகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment