2 ஜி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு புதுடில்லி உயர்நீதி மன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும் ஆசிப் பால்வா உள்ளிட்ட நான்கு பேரே பிணையின் விடுவிக்கப்பட்டவர்களாவர். எனினும், சித்தார்த் பெகுராவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
2ஜி மோசடி வழக்கில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட கனிமொழி 6 மாதங்களாக சிறையில் இருந்துவந்தார். பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறு கனிமொழி தாக்கல் செய்திருந்த 4 பிணை மனுக்கள் புதுடில்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே அவர் புதுடில்லி உயர்நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதேநேரம், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் சில தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கனிமொழி தாக்கல் செய்திருந்த பிணை மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இதுதொடர்பான தீர்ப்பு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்றைய தினம் கூடிய நீதிமன்றத்தில் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய விசாரணை, பிற்பகல் 1 மணிவரை நடந்தது. அப்போது, கனிமொழியின் வழக்கறிஞர் அல்டாப் கூறுகையில், "2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட், தனியார் கம்பெனியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் 23ஆம் திகதி பிணை வழங்கியது. எனவே, சுப்ரீம் கோர்ட் நம்பிக்கை சதி மோசடி குற்றத்தை கருத்தில் கொண்டுதான் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கனிமொழிக்கு பிணை வழங்க வேண்டும்' என்றார். இதையடுத்து, விசாரணை முடிவுக்கு வந்தது. இதன்பின், மதியம் 3.45 மணிக்கு, நீதிபதி ஷாலி, கனிமொழியின் ஜாமின் மனுமீது தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், "கனிமொழி உட்பட ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடுகிறேன்' என்றார்.
"2ஜி" வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டு வரை கனிமொழிக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். தனியார் கம்பெனியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு சுப்ரீம் கோர்ட ஜாமின் வழங்கியது. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு வரை தண்டனை கிடைக்கும். எனவே, இரு தரப்பினரையும் பார்க்கும் போது, கனிமொழி மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் தீவிரம் குறைவாக உள்ளது. தவிர குற்றத்தின் தீவிரத்தையும், அதற்கு விதிக்கப்படும் தண்டனை இரண்டையும் கருத்தில் கொள்கிறேன்.மேலும், கனிமொழி ஜாமின் மனுவுக்கு சி.பி.ஐ., எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கனிமொழி பெண் என்பதால், அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 437ஆவது பிரிவின் கீழ் சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்பதையும் இந்த கோர்ட் கவனத்தில் கொள்கிறது.
விடுதலை எப்போது:
கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி ஐகோர்ட் பிணை வழங்கி உத்தரவிட்டதை அடுத்து, அந்த உத்தரவு குறித்த அதிகாரப்பூர்வ ஆவணம், பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி. சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்குப்பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, பிணையில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தபின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை. இந்நிலையில், ஜாமின் உத்தரவை பெறுவதற்காக, கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, நீதிபதி ஒ.பி.சைனி, சிறப்பு கோர்ட்டில் உள்ள தன் சேம்பரில், மாலை 5.15 வரை காத்திருந்தார். ஆனால், பிணை உத்தரவு, சிறப்பு கோர்ட்டுக்கு ஐகோர்ட்டில் இருந்து வரவில்லை.
தாமதமானதால், நீதிபதி அதற்குப் பின் காத்திருக்கவில்லை.இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், "நாளை (இன்று) காலை, பிணைப் பத்திரத்தை, சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன்பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்' என்றார். இந்த தாமதம் காரணமாக, ஜாமின் கிடைத்த ஐந்து பேரும், மேலும் ஒரு இரவை சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்.

1. கருணாநிதி மகள் கனிமொழி
2. கலைஞர் "டிவி" நிர்வாக இயக்குநர் சரத்குமார்
3. பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி
4. கவுதம் தோஷி
5. ஹரி நாயர்
6. சுரேந்திர பைபரா (3 பேரும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குரூப்ஸ் நிர்வாகிகள்)
7. ஆசிப் பல்வா
8. ராஜிவ் அகர்வால் (2 பேரும் ஸ்வான் டெலிகாம் புரோமோட்டர்கள்)
9. யூனிடெக் வயர்லெஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா
10. டிபி ரியாலிட்டி நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா
பிணைக்காக காத்திருப்போர்
1. முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா (ஜாமின் கோரவில்லை)
2. சாஹித் உஸ்மான் பல்வா (ஸ்வான் டெலிகாம் புரோமோட்டர்)
3. ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா
4. முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா
விடுதலை எப்போது:
கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி ஐகோர்ட் பிணை வழங்கி உத்தரவிட்டதை அடுத்து, அந்த உத்தரவு குறித்த அதிகாரப்பூர்வ ஆவணம், பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி. சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்குப்பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, பிணையில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தபின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை. இந்நிலையில், ஜாமின் உத்தரவை பெறுவதற்காக, கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, நீதிபதி ஒ.பி.சைனி, சிறப்பு கோர்ட்டில் உள்ள தன் சேம்பரில், மாலை 5.15 வரை காத்திருந்தார். ஆனால், பிணை உத்தரவு, சிறப்பு கோர்ட்டுக்கு ஐகோர்ட்டில் இருந்து வரவில்லை.
தாமதமானதால், நீதிபதி அதற்குப் பின் காத்திருக்கவில்லை.இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், "நாளை (இன்று) காலை, பிணைப் பத்திரத்தை, சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன்பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்' என்றார். இந்த தாமதம் காரணமாக, ஜாமின் கிடைத்த ஐந்து பேரும், மேலும் ஒரு இரவை சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்.

0 comments:
Post a Comment