Monday, November 28, 2011

கைதிகளிடமிருந்து 19 செல்போன்கள் மீட்பு


அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள்மீது நேற்று முன்தினம் மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, "அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணை நடத்தும்" என்று தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் சிறைச்சாலையினுள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது கைதிகள் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் கைதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது கைதிகளிடம் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 65 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு நடத்தப்பட்ட சோதனையின்போது கைதிகள் உடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்று கூறிய செயலாளர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment