இவ்வாண்டு (2011 இல்) ஆகஸ்டில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள்.
செங்கலடி, கொம்மாந்துறை, விமலவாசா வீதியில் வசிக்கும் செல்வி சுந்தரேசன் டிலுக்ஷி இவ்வாண்டு (2011) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று புலமையாளராக தெரிவாகியுள்ளர். இவர் மட்/ செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றுவருகின்றார். பெற்றோர்கள், கல்வியைக் கற்றுத்தந்த ஆசான்கள், உதவிய அனைத்துள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்து எதிர்காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஒரு வைத்தியராக வர விரும்புவதாகவும் கூறுகின்றார். தொடரான பயிற்சிகளை மேற்கொண்டால் இவ்வெற்றியை இலகுவாகப் பெறலாம் என்றும் அவர் கூறுகின்றார்.
இறக்காமம் றோயல் கல்லூரியில் கல்வி பயிலும் தாஜூத்தீன், ஜெஸ்லியா ஆசிரியை ஆகியோரின் புதல்வியான றம்லத் சர்பி இவ்வாண்டு (2011) நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று இறக்காமத்தில் வரலாறு படைத்துள்ளார். இவரது இந்நிலைக்கு காரணமாக அமைந்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றார். எதிர்காலத்தில் வைத்தியராக வர ஆசைப்படும் இவரை நாமும் வாழ்த்தி நிற்போம்.
ஒலுவில் 04ஐச் சேர்ந்தவரும், ஒலுவில் அல்-அஸ்ஹர் வித்தியாலத்தில் கல்வி கற்று வருபருமான மாணவி சுலைமாலெவ்வை அன்வறா 180புள்ளிகளைப் பெற்று இம்முறை (2011) நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவாகியுள்ளார். இவர் வகுப்பில் கற்பித்த ஆசிரியர்களையும், மாலையிலும், வீட்டிலும் கற்றுத்தந்த பெற்றோர்கள், ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவுறுகின்றார். எதிர்காலத்தில் சிறந்த ஆளுமையுள்ள ஒரு நற்பிரஜையாகவும், மற்றவருக்கு உதவுகின்ற ஒரு நிலையினையும் இறைவன் அருள வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றார்.
நேர்காணல் : எஸ்.எல். மன்சூர்



0 comments:
Post a Comment