சட்டென்று உணர்ச்சிவசப் படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகி விடுவதும் அவர்கள்தான். தற்போது வந்திருக்கும் இந்தக் கொந்தளிப்பு சசிகுமாரிடமிருந்து. போராளி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இலங்கைக்கு கொவுக்கவில்லையாம் அவர்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சசி, துக்கவீட்டில் சினிமா பார்ப்பது போலத்தான் நாம் படத்தை இலங்கையில் வெளியிடுவதும். தமிழர்களை பற்றி எது பேசினாலும் அந்த படத்தை வெளியிட தடை விதிப்பது இலங்கை அரசின் வழக்கமாக இருக்கிறது. அவர்கள் என்ன நமக்கு தடை விதிப்பது? நாம் அவர்களுக்கு தடை விதிப்போம் என்றுதான் போராளி படத்தின் எப்.எம்.எஸ். உரிமையை கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார் சசி.
இந்த கருத்தை ஆமோதித்திருக்கிறார் 7ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி. இந்த படத்தை இலங்கைக்கு விற்க வேண்டாம் என்றுதான் அவரும் முடிவெடுத்திருந்தாராம். ஆனால் யார் யார் கைக்கு படம் மாறி, அவர்கள் சம்மதித்தில்தான் இந்த படம் இலங்கையில் வெளியானது என்றும் கூறியிருக்கிறார் உதயநிதி.
(அப்படியாயின், நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம், துக்கவீட்டில் இலங்கை சினிமா பார்க்கக்கூடாது என்றால், வேலாயுதம் திரைப்படத்துக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த பால் அபிஷேகத்தை என்னவென்று சொல்வீர்கள்? சும்மா உங்களது வியாபாரத்துக்காக தமிழ் உணர்வுகளை தயவுசெய்து தூண்ட வேண்டாம் இயக்குநர்களே...!)




0 comments:
Post a Comment