Friday, November 25, 2011

கடலில் குளித்த இளைஞன் மரணம்


(எம்.ஐ.எம். அஸ்ஹர்) 
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை நீரில் முழ்கி மரணமடைந்தார். நேற்று காலை கடல் கொந்தழிப்பாக இருந்த வேளையில் நண்பர்களுடன் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பாரிய அலையில் இழுத்துச்செல்லப்பட்டதனாலேயே இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் குளித்துக் கொண்ருந்த நணபர் உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்தவர் சாய்ந்தமருது பழைய மார்க்கட் வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் சியான் எனும் 27 வயதுடைய மேசன் தொழிலில் ஈடுபட்டுவந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் பிரதேச மீனவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அவரது ஜனாசா கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது சம்பந்தமாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment