(ஏ.ஜே.எம். ஹனீபா)
சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்புடன் அபிவிருத்தியை நோக்கி எனும் தலைப்பில் சம்மாந்துறை பொலிஸ் நியைத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.
இங்கு இலவச வைத்திய சேவைகள், மூக்குகண்ணாடி வழங்கல், பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள் வழங்கல், மத்தயஸ்த்த சபையின் சேவைகள், பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள் வழங்கல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றது.
இவ்விழாவில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.மென்டிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மாவட்ட பதிவாளர் சீ.எம்.எம்.சத்தார், அதிபர் திருமதி ஹபீறா சலீம், உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன், பொலிஸ் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எல்.அமீர், சிறு குற்றவியல் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.காதர் உட்பட சர்வமத தலைவர்கள், வைத்தியர்கள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment