(எஸ்.எல். மன்சூர்)
கிழக்கில் பெய்துவரும் பெருமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கின் கடலில் பவன அமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ள நிலையில் தற்போது அதிக மழையுடன் கூடிய கடும் காற்றும் வீசுகிறது.

கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீன் பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளதுடன் கடல் மீன், மற்றும் ஏனைய மரக்கறி விலைகளும் அதிகரித்துள்ளது. அதேவேளை தற்போது தென்கிழக்கில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனத்த மழையினால் பாரிய வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறியும் தென்படுகிறது. வீதிகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பல வீதிகள் நீர் நிறைந்துள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களின் வசதி கருதி டீன்வீதி, புறத்தோட்டம், மில் முன்வீதி போன்ற வீதிகளில் உள்ள நீரை அப்புறப்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன் ஆயிரக்கணக்கான நெல் வயல்களில் நீர் நிறைந்து வெள்ளக்காடாய் தென்படுவதால் விவசாயம் முற்றாக கைவிடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் இதேபோன்றதொரு வெள்ளத்தினால் முற்றாக செயலிழந்துபோன கிழக்கின் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த நஷ்டஈடு அரசு வழங்கவில்லை.
அதுபோன்றதொரு நிலை தற்போது தோன்றியுள்ளதால் விவசாயிகள் மட்டுமன்றி இதனை நம்பி வாழ்கின்ற மக்களின் நிலையும் கவலைக்குறியது என்கின்றனர் பொதுமக்கள். இவ்விடயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி பாதிக்கப்படுகின்ற மக்களின் துயர்துடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment