(பஹமுன அஸாம்)
இலங்கையில் வியட்நாம் தூதுவர் டொங் சிங் டான் அவர்களுக்கும் இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. பயங்கரவாதப் போர் முடிவடைந்தபின் இலங்கை இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் பற்றி டொங் சிங் டான் அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
வியட்னாம் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உள்ள சந்தர்ப்பங்கள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்கிடையிலும் கல்வித்துறையை மேம்படுத்தும் விதத்தில் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டமொன்றும் விரைவில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

0 comments:
Post a Comment