Sunday, November 13, 2011

தோழியை மணந்தார் இந்திய வீரர் அஸ்வின்


இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள சந்தோஷத்துடன், தனது பள்ளித் தோழி ப்ரீத்தி நாராயணனை இன்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மணமுடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வினும், ப்ரீத்தியும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் காதலித்து வந்தனர். இந்தக் காதலுக்குஇரு வீட்டாரும் சம்மதித்தனர். இதையடுத்து நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று திருமணம் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் திருமண விழாவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை அஸ்வின்-ப்ரீத்தி திருமணம் கோலாகலமாக நடந்தது. சமீபத்தில்தான் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் டெஸ்ட்டிலேயே 9 விக்கெட்களைச் சாய்த்து, ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அசத்தினார். இந்த சந்தோஷத்துடன் இன்று திருமண பந்தத்தில் அவர் இணைந்தார்.

திருமணம் முடித்த கையோடு நாளை கொல்கத்தாவில் தொடங்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலையே அவர் கொல்கத்தாவுக்குக் கிளம்பிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment