Sunday, November 06, 2011

அக்கரைப்பற்றில் கரையொதுங்கிய சடலம்

இன்று (2011.11.06) ம் திகதியன்று மாலை அக்கரைப்பற்று கடற்கரையில் ஒரு மனித சடலம் ஒன்று கரையொதுங்கியது. அச்சடலம் பொதிசெய்யப்பட்டதுபோல் காட்சியளித்தமை புதுமையாக இருந்தது. அச்சடலத்தை சுற்றிவர இரும்பு வலை சுற்றப்பட்டு கட்டப்பட்டிருந்ததுடன் சடலத்தின் ஒரு காலில் காலுறை ஒன்று அணிந்தவாறும் காணப்பட்டது. இச்சடலம் பற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தைப் பார்க்கவென ஊர்மக்கள் திரண்டிருந்தனர். இச்சடலம் ஆணா, பெண்ணா என்பதை அறியமுடியாதவாறு பேக்கொன்றினுள் புகுத்தப்பட்டே வலையினால் சுற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


பின்னிணைப்பு: தற்போது பிந்திக் கிடைத்த தகவல்களில் அடிப்படையில் அது ஒரு வெளிநாட்டவரின் சடலம் என தெரிய வந்துள்ளது.

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ். எல். மன்சூர்

0 comments:

Post a Comment