Saturday, November 05, 2011

வேலாயுதம் பார்ப்பதை நிறுத்தினார் ரஜினி


7ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால், வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.

உடனே ஒரு திகதியையும் முடிவுசெய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.


இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப்போனால், அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்துகொண்டு, சட்டென்று படம்பார்க்க வருகிற நிகழ்ச்சியை நிறுத்திவிட்டாராம் சூப்பர் ஸ்டார். குற்றம் செய்ய துடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஏன் துணை போவானேன் என்று கூட நினைத்திருக்கலாம் அல்லவா?

0 comments:

Post a Comment