(எம்.எம். ஜெஸ்மின்)
பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து சட்ட விரோதமான முறையில் இரகசியமாக நீலப்பட இறுவட்டுக்களை விற்பனை செய்து வந்த இளைஞரொருவரை தம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜே. வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் பிரதேசவாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான கடையொன்றை சுற்றிவளைத்த போது 14 நீலப்பட வீ.சீ.டி. மற்றும் டி.வி.டியுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு தம்புள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாகலியத்த கம்மடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதுடன் இவருடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்களையும் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

0 comments:
Post a Comment