Sunday, December 18, 2011

பாணில் 10 வீதம் அரிசி மா கட்டாயம் ; சுகாதார அமைச்சு அறிவிப்பு


பாண் தயாரிப்பதற்காக 10 வீதம் அரிசி மாவை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரிசி மாவில் தவிடு நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கோதுமை மாவை உணவாக உட்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நீரிழிவு உள்ளிட்ட தொற்றுநோய் அல்லாத ஏனைய நோய்களால் பீடிக்கப்படும் அவதானம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிடுகிறது. அரிசி மாவை கோதுமை மாவுடன் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்ட சுற்றறிக்கையை விநியோகித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment