Sunday, December 18, 2011

அடுத்த வருடம் முதல் மீனவர்களுக்கான காப்புறுதி கட்டாயம்


2012 முதல் கடலுக்குச் செல்கின்ற சகல மீனவர்களும் காப்புறுதிப் பத்திரங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது. அத்துடன் காப்புறுதிப் பத்திரம் இல்லாத மீன்பிடி படகுகளுக்கு அடுத்த வருடம் முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாதென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

பத்து மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கான இந்த காப்புறுதி முறைமையை பெற்றுக்கொள்வதற்கு மீனவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வேறு நாடுகளில் காப்புறுதி பெற்றுக்கொள்வது ஒவ்வொரு பிரஜைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன மீனவர்களுக்கு சார்பாகவே காப்புறுதி முறை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் 750 ரூபா வருடாந்த பங்களிப்பை வழங்கும் மீனவர்கள் ஒரு இலட்சம் ரூபா காப்புறுதியையும் ஆயிரத்து 500 ரூபா பங்களிப்பை வழங்கும் மீனவர்கள் மூன்று இலட்சம் ரூபா வரையும் காப்புறுதி பெறமுடியுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment