Wednesday, December 28, 2011

116 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் - பரீட்சைகள் ஆணையாளர்


இம்முறை கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 116 மாணவர்கள் பரீட்சை மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்திற்காக அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்

உரிய பரீட்சார்த்திக்கு பதிலாக வேறு நபர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை விடைத்தாளில் வெவ்வேறு கையெழுத்துக்கள் காணப்பட்டமை ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்காமை போன்ற குற்றங்களின் அடிப்படையில் இவர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை மத்திய நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய மாணவர்களின் பெறுபேறுகளும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானது என பரீட்சை மேற்பார்வையாளர்களினால் செய்யப்படும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment