ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 12-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சேவாக் 219 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதையடுத்து அவர் தரவரிசையில் 20-வது இடத்திலிருந்து 12-வது இடத்துக்கு முன்னேறினார்.இந்தியாவின் கேப்டன் தோனி 5-வது இடத்திலும், கம்பீர் 18-வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா 36-வது இடத்தில் உள்ளார்.பந்துவீச்சாளரின் வரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 13-வது இடத்தில் உள்ளார்.
0 comments:
Post a Comment