வட கொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் பீதியடைந்துள்ள ஜப்பான் நேற்று(12.12.2011) உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது.சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும் 2009ம் ஆண்டில் வட கொரியா டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதித்தது.
இந்த ஏவுகணை 6,700 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மேலும் பல ஏவுகணைகளை வட கொரியா தயாரித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.இதனால் அண்டை நாடான ஜப்பான் பீதியடைந்துள்ளது. ஜப்பானின் தென்பகுதியில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இலங்கை நேரப்படி நேற்று காலை h-2A என்ற ஏவுகணை மூலம் உளவு பார்க்கும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை உளவு பார்க்கும் அதேநேரம் ஜப்பானின் உள்பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், இந்த செயற்கைக்கோள் கண்காணித்து தகவல்களை அளிக்கும் என நம்பப்படுகிறது .

0 comments:
Post a Comment