இம்மாதம் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ளாவிடில், முன் அறிவித்தல் எதுவுமின்றி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னிட்டு தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கத்திடம் கோரி ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment