கிழக்கு, அம்பாந்தோட்டையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அடைமழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் மழை பெய்யுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் ஓரளவு மின்னல் தாக்கம் காணப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மின்னலினால் ஏற்படக்கூடிய விபரீதங்களை தவிர்க்கும் வகையில் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
கிழக்கு, மாகாண மற்றும் தென்கிழக்கு கடற் பரப்புக்களில் மணித்தியாலத்திற்கு 10 தொடக்கம் 20 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசம் என்பதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இடம்பெற வாய்ப்புண்டு எனவும் அவர் கூறினார்.

0 comments:
Post a Comment