(கலாநெஞ்சன்)
தெற்கு கடுகதி வீதி திறக்கப்பட்டது முதல் தற்போது வரை 155 இலட்சம் ரூபா
வருமனமாக கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது வரை தெற்கு கடுகதி வீதிக்கு அதிக எண்ணிக்கையான வாகனங்கள் கொட்டாவ நுழைவு
வீதி வழியாகவே பிரவேசித்துள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 18518 எனவும், பத்தேகம
நுழைவு வீதி வழியாக குறைந்த எண்ணிக்கையான வாகனங்கள் இந்த வீதிக்கு
பிரவேசித்துள்ளதகவும் அதன் எண்ணிக்கை 1947 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி வரையான 24 மணித்தியாலக் காலப்பகுதியில் 15 இலட்சம் ரூபா
வருமானமாக கிடைத்துள்ளதாகவும்,இந்தக் காலப் பகுதியில் 5449 வாகனங்கள் இந்த
வீதியை பயன்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment