Tuesday, December 20, 2011

திருகோணமலையில் 168 பேர் டெங்கினால் பாதிப்பு


திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாண்டு 168 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று என்றும் ஒருவர் மூதூரில் டெங்கினால் உயிரிழந்துள்ளார் என்றும் திருகோணமலை பொது வைத்திய அதிகாரி டாக்டர் து. தவக்கொடிராசா தெரிவித்தார். கடந்த 3 மாதங்கள் திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய பிரிவில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட ஆளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2011 இல் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாதவாரியாக வருமாறு, ஜனவரி-07, பெப்ரவரி-17, மார்ச்-25, ஏப்ரல்-25, மே-12, ஜூன்- 19, ஜூலை-21, ஆகஸ்ட்-06, செப்டெம்பர்-10, ஒக்டோபர்-03, நவம்பர்-08, டிசம்பர் இன்று 20ஆம் திகதி வரை-15.

0 comments:

Post a Comment