Wednesday, December 07, 2011

எக்ஸ்போ - 2012 கண்காட்சிக்கு அழைப்பு


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களில்  மீள்குடியேறியுள்ள மக்களுக் காகன பல்வேறுபட்ட வாழ்வதார மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்துவரும் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்துள்ள கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், கடந்த 15 ஆண்டுகளின் பின்னர் சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம் பெறவுள்ள எக்ஸ்போ-2012 கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு ஜரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் அழைப்புவிடுத்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இக்குழவில் பராளுமன்ற உறுப்பினர்களான டேவிட் மார்டின், றிச்சார்ட் ஹோவிட், அனா டேவிட் மற்றும் கொள்கை வகுப்பு ஆலோசகர் பிரிக்கட் பாட்டலி ஆகியார் உள்ளடங்குகின்றனர்.

கைத்தொழில்,வணிக அமைச்சின் கீழ் இயங்கும் வர்த்தக திணைக்களத்தின் தரவுகளின் படி, இலங்கை அதிகமான ஏற்றுமதி பொருட்களை ஜரோப்பிய ஒன்றியத்திற்கே அனுப்பி வைக்கின்றது.2010 ஆம் ஆண்டில் 4434 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறக் கூடியதாக இருந்தது.ஜக்கிய ராஜ்யம், ஜேர்மன், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸ்லாந்து போன்ற நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்துவருகின்றன.

ஆடைத் துறை,வலை பின்னல், துணிமணிகள், கப்பல் சீலைகள், மின்னியல் சாதனங்கள், மின்சார கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகளுக்கு இந்த நாடுகளின் முதலீடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக 1992 ஆம் ஆண்டிலிருந்து ஜரோப்பிய ஒன்றியம். இலங்கையில் யுத்த்த்தால் பாதிக்கப்பட்ட, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றதுடன், 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த்தும் தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கிவருகின்றதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

அதே வேளை 2010 ஆண்டு காலப்பகுதியில்  ஜரோப்பிய ஒன்றியம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், வாழ்வாதார  மற்றும் சமூக கட்டமைப்புக்கு என 16 மில்லியன் யூரோக்களை,வழங்கியுள்ளது.அதே வேளை உள்நாட்டில் இடம் பெயரந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஏனைய துறைகளுக்கான உதவிகளின் பலாபலன்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்தார்.

புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர்களுக்கு தொழில்சார் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகளயும்,அரசாங்கத்தால் வழங்க்க்க கூடியதாக இருக்கின்றது.அதேபோல் எதிர்வரும் ஜனவரியில் திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் விவசாய செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,இடம் பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களது வருமான செயற்பாடுகளுக்கான உதவிகள் பல வழங்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் செயலாளர் திலக் கொள்ளுரே, அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment