
கஹடகஸ்திஹிலிய, வெலிகொல்லேவ பிரதேசத்தில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அதிலிருந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இறைச்சிக்காக அறுக்கப்பட்ட 23 மாடுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாடு அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென கஹடகஸ்திஹிலிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment