(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)
வடக்கில் அனைத்து சமூகங்களும் சமமான அனைத்து வசதிகளையும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படும் எமக்கெதிராக சில காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள், மக்கள் பெறும் நலன்களை தடுக்கும் கொள்கையினை வகுத்து செயற்படுவதாக கடிந்துகொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இவர்கள் எந்த தடைகளை போட்டாலும் மக்களின் விமோசனத்திற்காக எம்மால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லையென்று தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மாந்தை மேற்கு பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளின் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை கையளிக்கும் வைபவம் திங்கட்கிழமை கருக்காக்குளம் மகா வித்தியாயலத்தில் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.குரூஸ் தலைமையில் இடம்பெற்றது. அங்கு மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது,
கடந்த 2 வருட காலத்தில் மடு கல்வி வலயம் பாரிய முன்னேற்றத்தை கண்டுவருகின்றது. இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் மாணவர்கள் தமது கல்வியினை தொடர முடியாத நிலை காண்ப்பட்டது. இதனால் எமது மாவட்டம் பெற்றுக் கொள்ள வேண்டிய பல் துறை சார்ந்தவர்களை இழக்க நேரிட்டது. எமது மாவட்டத்தில் துறை சார்ந்தவர்கள் உருவாகுகின்றபோது, பிரதேசம் சகல துறைகளிலும் அபிவிருத்தி கானும். இதன் மூலம் மக்களது வாழ்வும் சிற்றக்கும்.
மடு கல்வி வலயத்தில் காணப்பட்ட ஆசிரிய தட்டுப்பாட்டை நீக்குவதற்கு,ஏனைய பாடசாலைகளில் மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை கொண்டுவந்து இம்மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வசதி செய்து கொடுக்க முற்படும் போதும்,கூட்டமைப்பினர் அதற்கு எதிராக செயற்பட்டனர். தமிழர்களும், முஸ்லிம்களும் கற்றலில் ஈடுபடுபகின்றபோது அதனைக் கூட தடை செய்யும் பணியினை இவர்கள் மேற்கொள்வது அநியாயமாகும்.
வடக்கில் கற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான வளங்களை நாம் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். அதற்கு தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் எமது உள்ளங்களில் இல்லை எமது மாவட்டம் என்ற உணர்வே எங்களிடம் மேலோங்கியுள்ளது. கற்கும் மாணவர்கள் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபட வேண்டும். அப்போது தான் மடு கல்வி வலயத்தில நாம் எதிர்பார்க்கும், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சிறந்த கல்விமான்களை உருவாக்கமுடியும்.
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் எமக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியினை வழங்குகின்றோம். நாம் இனவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் தோன்றுபவர்கள் அல்ல, சிலருக்கு அவ்வாறான தேவை இருக்கின்றது. அதனை மாணவ சமூகத்திற்கு மத்தியில் விதைக்க முற்படுகின்றனர். அதற்கு மாவணவர்கள், ஆசிரியர்கள், பெறோர்கள் இடம் கொடுக்கக் கூடாது.
அனைத்து மாணவர்களையும் தமது பிள்ளை போன்று பராமரிப்பது கல்விசார சமூகத்தின் முக்கிய கடமையாகும் என்றும் அமைச்சர் றசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் அடம்பன் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் சந்தியாகு (செல்லத்தம்பு), மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஹம்மத் றியாப், நவ்பில், நெடா இமைப்பின் தலைவர் எம்.அமீன் மற்றும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment