
செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் பிலாண்டர், ஸ்டெய்ன் கூட்டணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ஓட்டங்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
பிலாண்டர் 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 3 டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ் 5 விக்கெட் ஆட்டத் திறனை காண்பித்துள்ளார். 2 முறை ஆட்ட நாயகன் விருதையும் ஒரு முறை தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.
உலக கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்குச் சவால் அளிக்கும் ஒரு பந்து வீச்சாளர் தோன்றியுள்ளார். காயங்களை பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் இவர் உலக சாதனைகள் பலவற்றை முறியடிக்க வாய்ப்புள்ளது ஒரு பந்து வீச்சு நட்சத்திரம் பிறந்து விட்டார். ஏன்றே சொல்லலாம். இந்தப் போட்டியிலும் அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் சமரவீர (32) தவிர கடைசியில் ரங்கன ஹேரத் ஸ்டெய்ன் மற்றும் பிலாண்டரை இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்து 2 பவுண்டரிகளையும் அடித்து 23 ஓட்டங்களை எடுத்தது மட்டுமே இலங்கை அணிக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.
பெரேரா 21 ஓட்டங்களில் சற்றே ஆக்ரோஷம் காட்டினார். வெலகெதர பிலாண்டர் பந்தை ஒரு அபார சிக்சர் அடித்தார். இலங்கை இன்னிங்சில் சொல்லிக்கொள்ள இவை மட்டுமே உள்ளது. இலங்கை அணியில் தம்மிக்க பிரசாதும், நுவான் குலசேகராவும் வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் பாக்ஸிங் டே யான 26ஆம் திகதி தொடங்குகிறது.
அன்றுதான் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.
0 comments:
Post a Comment