Friday, December 16, 2011

களுவாஞ்சிக்குடியில் பாரிய வாகன விபத்து; பொலிஸார் பலி, இருவர் படுகாயம்


(எம்.எம்.ஜெஸ்மின், எம்.ஐ.எம். அஸ்கர் ) 
மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கல்முனையில் இருந்து வந்த பிக்கப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் ஸ்தலத்திலேயே பலியானார். இந்த விபத்துச் சம்பவம் களுவாஞ்சிக்குடியில் இன்று இரவு இடம்பெற்றது.

அதேவேளை, கொழும்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்ற காரில் பயணித்த ஒருவரும் இந்த விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியதுடன் பலத்த காயங்களுக்குள்ளனார். அத்துடன், மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வேறொருவர் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் மோதி படுகாயமடைந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தற்போது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஸ்தலத்தில் பலியான பொலிஸ் அதிகாரியின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:

Post a Comment