Thursday, December 29, 2011

அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 3ஆம் திகதி முதல் பஸ் சேவை ஆரம்பம்


(பஹமுன அஸாம்) 
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 3ஆம் திகதி முதல் அரச பஸ்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் எம்.டீ.பந்துசேன தெரிவித்துள்ளார். இதன்படி 42 பயணிகள் செல்லக் கூடிய சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு அவை காலியில், மஹரகம என்ற பாதையில் சேவையில் ஈடுபடவுள்ளன. காலியில் இருந்து மஹரகம வரையிலான தூரத்துக்கு 400 ரூபா அறவிடப்படும்.

இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மஹரகம பஸ்தரிப்பு நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அவர்களின் தலைமையில்  இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment