Thursday, December 29, 2011

A/L பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
2011ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் மாணவர்களிடமிருந்து கோரியுள்ளது. இவ்விண்ணப்பங்கள் 2011.12.29ஆம் திகதி தொடக்கம் 2012.01.15ஆம் திகதி வரைக்கும் நாட்டின் சகல பிரதேசங்களிலுமுள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

மீளாய்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு 250/- ரூபா பெறுமதியான பற்றுச் சீட்டினை தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படிவத்தில் கழராதவாறு ஒட்டி அனுப்பி வைக்கப்படவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment