Wednesday, December 14, 2011

தனியார் பேரூந்து விபத்தில் 30 பேர் காயம்


மட்டக்களப்பு, புனானை பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஏழு பேரின் கவலைக் கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தே அனர்த்த த்திற்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 30 பேர் காயமடைந்தனர் இதில் 20 பேர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கவலைக்கிடமான நிலையில் உள்ள 7 பேர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும், ஏனையோர் வாழைச்சேனை வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment