
கிழக்கு மாகாண அரசசேவை முகாமைத்துவ உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் விடைத்தாளுடன் 5,000 ரூபா பணமும், ஒரு கடிதமும் இணைந்திருந்தனைக் கண்டு அதிர்ச்சியைடந்துள்ளார். விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் இது சம்பந்தமாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
விடைத்தாளுடன் இரண்டு 2,000 ரூபா நோட்டுகளும் ஒரு 1,000 ரூபா நோட்டும் கடிதமொன்றும் ஒரு உறையில் போடப்பட்டு விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் தான் மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பதாகவும் தனது இரண்டு காதணிகளையும் வங்கியொன்றில் அடகுவைத்த பணத்தையே இத்துடன் இணைத்துள்ளதாகவும் இப்பரீட்சையில் எந்தவிதத்திலாவது தன்னை சித்தியடை யச்செய்தால் எனது வாழ்க்கையில் செய்யும் பெரிய உதவியாகக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment