Monday, December 19, 2011

இஸ்ரேலில் 550 பலஸ்தீன சிறைக் கைதிகள் விடுதலை


பலஸ்தீன சிறைக் கைதிகள் 550 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த கைதிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் பலஸ்தீனிய சிறைக்கைதிகள் 477 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் இஸ்ரேலின் ரமால்லாஹா நகரில் வைத்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை வரவேற்பதற்காக பலஸ்தீன் ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்னால் கைதிகளின் உறவினர்கள் ஒன்று கூடியிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கைதிகளை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பெயர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

குறித்த சிறைக் கைதிகளில் 6 பெண்கள் உட்பட 14 - 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 55 பேர் உள்ளடங்குவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment