Monday, December 19, 2011

சட்டவிரோத கடல் ஆமை இறைச்சியுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது


(கலாநெஞ்சன்) 
சட்ட விரோதமான முறையில் கடல் ஆமைகளை பிடித்து அவற்றை கொன்று இறைச்சியாக்கி விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, அலஸ் வீதியை சேர்ந்த கல்பகே சிசில் அப்புஹாமி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.

இவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கிராம் நிறை கொண்ட இரண்டு கடலாமைகளின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி சிறில் பெர்னாந்து தெரிவித்தார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு கடற்கரைத்தெரு, சூரிய வீதி கடலோரப் பகுதியில் ஆமைகளின் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.


0 comments:

Post a Comment