Sunday, December 11, 2011

79 வயதில் 75 மனைவிகளை திருமணம் முடித்த பெரிசு


இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தைனுக்கு திருமணம் செய்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு. அவர் தனது 75ஆவது மனைவியை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்துள்ளார். 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது தோட்டத்தில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மனைவிகள் என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக திருமணங்களைச் செய்து அசத்தியிருக்கிறார் அலெக்சாண்டர் தைன். தனது மனைவிகள் கூட்டத்துக்கு செல்லமாக ‘வைஃப்லெட்ஸ்' என்று பெயரும் வைத்திருக்கிறார்.

ஹங்கேரி மொடல், சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75ஆவதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அதுவும் அடிக்கடி வருகிறது.

சமீபத்தில்கூட அவரது 68ஆவது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால், இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார். இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்.











0 comments:

Post a Comment