Sunday, December 11, 2011

30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கார்

கும்பகோணம்: டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கார், நேற்று கும்பகோணத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. கும்பகோணத்தில், "டாடா கோல்டு ப்ளஸ்' நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

உலகத்தில் முதல் தங்க ஆபரணம் அணியத் துவங்கி, 5 ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனம் சார்பில், 30 கோடி ரூபாய் மதிப்பில் தங்க கார் வடிவமைக்கப்பட்டது. இந்த கார், கும்பகோணம் ராயா மஹாலில் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கும்பகோணம் டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் வரவேற்றார்.

தொழிலதிபர்கள் கோவிந்தராஜன், லைலா சுப்பிரமணியம், வக்கீல் திருவேங்கடம், கோல்டு ப்ளஸ் நிறுவன அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். பின்னர், தங்க காரை பொதுமக்களுக்கு கோவிந்தராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர். நிறுவனத்தின் தலைவர் தினேஷ் கூறுகையில், "டாடா கோல்டு ப்ளஸ்" நிறுவனத்தின் 30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்க காரை, 30 தொழிலாளர்கள் 30 நாட்களில் உருவாக்கினர். இதில், கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன் குழுவினரை உள்ளடக்கிய, 10 பேரும் இடம் பெ ற்றிருந்தனர்.

காரை வடிவமைக்க 80 கிலோ தங்கம், 25 கிலோ வெ ள்ளி, 10 ஆயிரம் நவரத்தின கற்கள் உபயோகப்படுத்தப்பட்டது. இன்று முதல் 14ம்தேதி வரை இங்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கார் காட்சிக்கு உள்ளது. பொதுமக்கள் அ னைவரும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். காருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழுவதும் தங்கத்தால் ஆன காரை பார்த்த குடந்தை மக்கள் பரவசமடைந்தனர்.

0 comments:

Post a Comment